தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். #MeToo சர்ச்சையில் விஸ்வதர்ஷினி என்ற பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷால் குறித்து பல ரகசியங்களை வெளியிட்டிருந்தார்.

அதில், விஷால், நள்ளிரவில் நடன பெண்ணின் வீட்டுக்கு சுவர் ஏறிக் குதித்து சென்றார் என்று குறிப்பிட்டிருந்தார். இதே போன்று பல தகவல்கள் தன்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அதனையும் என்று வெளியிடுவேன் என்று விஸ்வதர்ஷினி கூறியிருந்தார்.

ஆனால் விஷால், இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், விஷால், மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கைது நடவடிக்கை, விஸ்வதர்ஷினியின் பக்கத்து வீட்டு சிறுமி குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகவும், அது குறித்து தேசிய குழந்தைகள் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து விஸ்வதர்ஷினி மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, விஸ்வதர்ஷினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷால் குறித்து கூறியதாவது, “கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அதிகாலை 2 மணிக்கு விஷால் வந்தார். அதன் பிறகு 2 மணி நேரம் கழித்து, காலை 4 மணிக்கு பின் வாசல் பக்கமாக சுவர் ஏறி குதித்து ஓடினார். இது எதற்காக செய்தார்.. அங்கே ஏன் வந்தார்.. என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இவ்வளவு ஏன் சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த போது விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்பதற்காக ஆதாரம் தன்னிடம் உள்ளது” என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.