கேளிக்கை

நடிகர் விக்கிரமின் மகன் கார் மோதி விபத்து

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் ஓட்டிவந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.இதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார். துருவ் ஏற்படுத்திய கார் விபத்து செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது. ஆட்டோ டிரைலருக்கு காலில் அடிபட்டது போல் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின.

விபத்து எற்பட்டவுடன் துருவ் உட்பட அந்த காரில் வந்த அவரது நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதன்பிறகு சென்னை பாண்டிபஜார் போலிசார் துருவ்வை பிடித்து தற்போது விசாரணை நடத்தி, 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவரை ஜாமினில் விடுவித்தனர்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து விக்ரமின் மேனேஜர் கூறுகையில், நடிகர் விக்ரம் மகன் துருவ் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. “நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும் ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

விபத்தில் பாதிக்கபட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.

இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

89 Replies to “நடிகர் விக்கிரமின் மகன் கார் மோதி விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *