புதுமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில், படம் பற்றி இயக்குனர் தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ‘வெட்னஸ்டே’ பட பாணியில் உருவாகும் திரைப்படமே தீர்ப்புகள் விற்கப்படும்.

படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். கோடைவிடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

யாமிருக்க பயமே படத்திற்கு இசையமைத்த பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவு மற்றும் சரத் படத்தொகுப்பு. ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் இப்படத்தை தயாரிக்கிறார்” என்று இயக்குனர் தீரன் குறிப்பிட்டார்.