கேளிக்கை சினிமா

நடிகர் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ டீஸர் வெளியீடு

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

8 தோட்டாக்கள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் ஸ்ரீகணேஷ். இவரது இயக்கத்தில் அதர்வா- ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதிகா, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ராக் போர்ட் என்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கின்றனர்.

கமர்சியல் மற்றும் திரில்லர் பாணியில் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது குருதி ஆட்டம் படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குருதி ஆட்டம் படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

‘சார்பட்டா பரம்பரை’ குழுவினருடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆர்யா

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.