யூ டியூப் விமர்சகரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸின் பல கோடி மதிப்புள்ள வீட்டில், சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் லேப்டாப் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை தனது ஆயுதமாக பயன்படுத்தி வரும் மாரிதாஸ், யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

மதுரை கே.புதூரைச் சேர்ந்த சேர்ந்த மாரிதாஸ், சமீபத்தில் நியூஸ்18 தமிழ்நாடு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், தொலைக்காட்சி நெறியாளர்களும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டி கருத்துகளை வெளியிட்டார்.

இது தொடர்பாக அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம், மாரிதாஸ் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக சென்னை நகர குற்றவியல் போலீசில் புகார் மனு அளித்தது. இதனையடுத்து மாரிதாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை கே.புதூரில் மாரிதாஸுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் லேப்டாப் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சிலர் மாரிதாஸ் வீட்டின் முன்பாக திரண்டுள்ளனர்.

இதனிடையே யூ டியூப் சேனலில் மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டும் பரப்பிக்கொண்டு, செய்த வியாபாரங்களில் எல்லாம் தோல்வியுற்று, கடன் தொல்லையில் தவிக்கும் மரிதாஸுக்கு மதுரையில் எவ்வாறு நாலு கோடி மதிப்புள்ள வீடு உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மேலும் வாசிக்க: விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் பாதுகாப்பு போலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டில் தீடிர் மரணம்