குஜராத் ஆர்எஸ்எஸ் மாடல் அப்படின்னா என்ன கண்ணா..
தான் செய்த கொலைகளை மறைக்க.. சிசிடிவி தடையத்தை அழிக்க.. சட்டவிரோதமாக மைனர் மாணவர்களை ஷாக்கா என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் கேம்ப் நடத்திய தடைகளை முற்றிலும் மறைக்க..

கலவரத்தை சாரை சாரையாக பைக்குகளை ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பில் இருக்கும் பெட்ரோல் கொடுத்து அடியாட்களை பள்ளிக்கு அனுப்பி.. அவர்கள் கையில் பள்ளியின் டிராக்டர் சாவியும் எடுத்துக் கொடுத்து அவர்கள் ஆற அமர எல்லா பஸ்களையும் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கி செல்லும் வரை ..
இருப்பதுடா கண்ணா என்று சொல்லிவிட்டு மட்டும் சென்று விட முடியாது..

தீவிரவாத காரணங்களுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கொள்கை பரப்ப பல மீட்டிங்களை நடத்திய.. பெருமைமிகு ஆர்எஸ்எஸ் தாளாளர் மற்றும் செயலாளர் மற்றும் அந்த தீவிரவாத இந்துத்துவா கொள்கைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்திய பள்ளி முதல்வர் தடாலடி கைதுகளை வரவேற்கும் அதே நேரத்தில்..

லோக்கல் போலீஸ் துணையுடன் இவர்கள் கூட்டு சதியும் வெளிவர வேண்டும்.. இவர்களுக்கு உடந்தையாக இருந்த லோக்கல் போலீஸ் மீது நடவடிக்கை பாய்ந்து அவர்களும் கைது செய்யப்பட வேண்டும்..

மூன்று நாள் நடக்கும் போராட்டத்திற்கு வெறும் 50 போலீசை வைத்துக் கொண்டு எதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள் லோக்கல் போலீஸ் என்ற கேள்விக்கும் பதில் கண்டிப்பாக வேண்டும்..

திடீரென 500 போராட்டக்காரர்கள் எங்கிருந்து வந்தார்கள் யாரால் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் அவர்களுக்கு பணம் தந்தது யார்.. எதனால் அவர்கள் எல்லா தடையத்தையும் அழித்தார்கள் என்ற உண்மையும் மக்களுக்கு தெரியப்பட வேண்டும்..

அதுமட்டுமல்ல அரசுக்கு எதிராக தமிழக மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எக்கச்சக்கமான கட்டணம் பெற்றுக்கொண்டு தான்தோன்றித்தனமாக பள்ளிகள் நடக்காது என சொன்ன தீவிரவாதி நந்தகுமாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்..

பள்ளிக்கல்வித்துறை முக்கியமாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பப்பட வேண்டும். அதில் முக்கியமாக கலவரத்தை தூண்டும் விதமாக இனி எந்தப் பள்ளி ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை நடத்தினாலும், அந்தப் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் பள்ளியின் உடமைகளை அரசுடமையாக ஏற்க தமிழ்நாடு அரசு ஆவண செய்திட வேண்டும்..

ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் துணையுடன் ஊடுருவி உள்ளன புல்லுருவிக் கூட்டங்கள்.. இவைகளை கட்டம் கட்ட வேண்டிய பொறுப்பு திமுகவின் தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் உள்ளது..

இதுவரை ஏழு மாணவிகள் அந்த ஆர்எஸ்எஸ் சார்பு பள்ளியில் மரணம் அடைந்து விட்டார்கள் என்கிறார்கள் ஆதாரத்தைக் காட்டி உள்ளூர் மக்கள்.. ஆக உடனடியாக அந்த ஏழு மாணவிகள் மர்ம விசாரணையும் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டும்..

இது நடந்தால் தான் ஸ்ரீநிதி மர்ம மரணம் உள்ளிட்ட மற்ற ஏழு மாணவிகள் மர்ம மரணம் பற்றிய முடிச்சுகளும் அவிழும்.. இல்லாவிட்டால் அதிமுக நிர்வாகிகள் விரும்பாத நிரந்தர பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மர்ம மரணம் போல இதுவும் நிரந்தரமாக உறங்கிவிடும் அபாயம் உள்ளதாகவே மக்களால் கருதப்படும்..

சமூக வலைத்தளத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/pfbid04rY11NxDEkMEA6hE5fiXrCFgZqWj65awBiQFjJAVneB7Vef2EPH8mZBQYQn3ojuVl