சிப்காட் என அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற் முன்னேற்ற கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Assistant Engineer (Civil) – 11 இடங்கள்
2. Assistant Engineer (Electrical) – 1 இடம்

தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம் : ரூ.36,700 – 1,16,200

வயதுவரம்பு : 01.09.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 06.09.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 30.09.2018

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.500 மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் SIPCOT என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய…