தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் “மின்னணு நிர்வாகம்” மற்றும் “மொபைல் ஆப்” உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத “மெட்டல் ஷீட்” தயாரிக்கும் ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி க்கு சென்னை மாநகரத்தின் “ஸ்மார்ட் சிட்டி” மின்னணு நிர்வாகம் தொடர்பான 149 கோடி ரூபாய் டெண்டர் வழங்கபட்டது எப்படி என்ற சர்ச்சை வெடித்துள்ளது

அந்த தனியார் கம்பெனியின் இணையதளத்தில் “இயந்திரங்கள் தயாரிப்பது தான் எங்களது முக்கியமான தொழில்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதையும் செய்த முன் அனுபவம் இல்லை என்பது அந்தக் கம்பெனியின் இணைய தளம் மூலமே தெள்ள தெளிவாகவும் தெரிய வருகிறது .

மேலும் இது அமைச்சரின் பினாமி கம்பெனி என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சொன்ன குற்றசாட்டுக்கு இது வரை எந்த பதிலும் இல்லை ..

பத்து ஸ்மார்ட் சிட்டி டெண்டரைப் பொறுத்தமட்டில் கேரள மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான “கெல்ட்ரான்” நிறுவனம் தான் விலை குறிப்பிட்டதில் (“ரேட் கோட்” பண்ணியதில்) இரண்டாவதாக வந்திருக்கிறது.

ஆனால், மேலே குறிப்பிட்ட அமைச்சரின் பினாமி கம்பெனி ஏன் “டெண்டரை டெண்டர் கமிட்டி மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கோருகிறது என்ற கேள்விக்கும் அரசிடம் இருந்து இது வரை பதில் இல்லை .

ஸ்மார்ட் சிட்டி திட்டம்” பிரதமரின் முன்னோடித் திட்டமாக இருந்த போதிலும் இத்திட்டத்தை கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கும் பாஜக மற்றும் அதிமுக அரசிடம் இருந்து இது வரை பதில் இல்லை .

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கும் மத்திய பாஜக அரசிடம் இருந்து இது வரை பதில் இல்லை .

டுபிட்கோ டெண்டரில் உள்ள பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் “மின்னணு நிர்வாகம்” தொடர்பான ஒப்பந்தங்களையும் மேலே குறிப்பிட்ட அமைச்சரின் பினாமி கம்பெனிக்கே கொடுக்க அமைச்சர் இப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்வதும் வெளிச்சத்துக்கு வந்துள்ள் நிலையில் .,

பின்வரு முக்கிய நான்கு குற்றசாட்டை திமுகவின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் முன் வைத்துள்ளதால் அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது

குற்றசாட்டு 1 :

டெண்டரில் மேலே குறிப்பிட்ட அமைச்சரின் பினாமி கம்பெனிக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் தான், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு கார்த்திகேயன் டுபிட்கோவின் “தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்” பொறுப்பில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளாரா …

குற்றசாட்டு 2 :

அதிமுக அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் “குறைந்த ரேட்” கொடுத்துள்ள கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்ற டெண்டர் சட்ட விதிகளை மீறி, அதிக ரேட் போட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த மேலே குறிப்பிட்ட அமைச்சரின் பினாமி கம்பெனிக்கு “ஸ்மார்ட் சிட்டி பணிகளை” கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் குளறுபடிகளை அமைச்சர் திட்டமிட்டு நடத்துகிறாரா …

குற்றசாட்டு 3 :

சென்னை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள எல்.ஈ.டி. விளக்குகள் பொருத்தும் கான்டிராக்ட் உள்ளாட்சித் துறை அமைச்சரின் இந்த பினாமி தனியார் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுள்ளதா..

குற்றசாட்டு 4 :
ஸ்மார்ட் சிட்டியைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு 50 சதவீத நிதியும், மாநில அரசு 50 சதவீத நிதியும் செலவழிக்கிறது. ஆகவே, மத்திய அரசு நிதி செலவிடப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் ஏன் தட்டிக் கேட்காமல் இருப்பதன் மாயம் என்ன..

இத்தகைய குற்றசாட்டுகளை கேட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசு நிதியும் இருக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.