தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 109 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் மட்டும் 86 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுயள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 3 வது இடத்தில் தொடர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,852,156 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பலி எண்ணிக்கை 38,969 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 2வது இடத்தில தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 03) 5,609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 263222 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா பலி எண்ணிக்கை ஒரே நாளில் 109 ஆக்க அதிகரித்துள்ளது. அதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது, ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1021 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் 1,222 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 20 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: ஜெயலலிதா நினைவிடத்திற்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு நிதி ரூ.22.83 கோடி அபேஸ்…