அமெரிக்கா உலகம் வாக்கு & தேர்தல்

ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்க கோரி டிரம்ப் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அந்த மாகாண உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் டொனால்ட் டிரம்ப் தரப்பு தங்களது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது.

மேலும் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான பல்வேறு வழக்குகளையும் டிரம்ப் பிரசார குழுவினர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்தனர். இதில் பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கியமான பங்கு வகித்த பென்சில்வேனியா மாகாணத்தில் பதிவான பல லட்சக்கணக்கான தபால் வாக்குகளை செல்லாது என அறிவிக்க கோரி அந்த மாகாண நீதிமன்றத்தில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ பிரான், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தார். இதற்கு எதிராக பென்சில்வேனியா உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டிஸ்மிஸ் செய்தது உத்தரவிட்டது டிரம்பிற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

‘நான் அமெரிக்க அதிபர்’.. நிருபரிடம் ஆவேசம் அடைந்த டிரம்ப்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.