‘நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்’ என டொனால்ட் டிரம்ப் நிருபரிடம் ஆவேசம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பிடனிடம் தோல்வி அடைந்தார். எனினும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து ஜோ பிடன் மீது தேர்தல் மோசடி புகாரை கூறி வருகிறார்.

இந்நிலையில் ராய்ட்டர்ஸ் வெள்ளை மாளிகையில் நிருபர் ஜெஃப் மேசன், அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பிடனுக்கு எதிரான டிரம்பின் தேர்தல் தோல்வி குறித்தும் அவர் எப்போது வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற உள்ளார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் கோபமடைந்த டிரம்ப், “நான் அமெரிக்காவின் அதிபர். என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம். நான் தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது மோசமான தேர்தல். 3வது உலக போரை போன்ற தேர்தல் ஆகும்.

மோசடி காரணமாக ஜோ பிடன் வெற்றி பெற்றார். நிச்சயமாக ஜோபிடனால் 80 மில்லியன் வாக்குகளை எடுத்திருக்க முடியாது” என்று நிருபரிடம் சீறி உள்ளார் டிரம்ப். வழக்கம்போல் கடந்த 4 ஆண்டு அதிபர் காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் போலவே இந்த முறையும் நிருபர்களிடம் டிரம்ப் கோபம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெட்ஃபிளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு