2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் தேதி ஞாயிறு கிழமை காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 03.04 மணி வரை நிகழ்கிறது. இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 6 மணி நேரம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 26, 2019 நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் சேர்க்கையுடன், 3 மணி நேரம் மட்டுமே நிகழ்ந்த இந்த சூரிய கிரகணம் கேது கிரகஸ்த சூரிய கிரகணமாகும்.

அதுபோல் வரும் 21ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். இந்த கிரகண நேரத்தில் பூமிக்கும் நிலாவுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும். இப்படி அதிக தூரம் சென்றிருக்கும் நிலா, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கருப்பு தட்டை போல் தோன்றும்.

இந்த நிகழ்வு, தீ வலையத்தைப் போல் காட்சியளிக்கும். ஜூன் 21ஆம் தேதி நிகழும் இந்நிகழ்வு இந்தியா, பாகிஸ்தான், சீனா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் தெரியும். ஆய்வாளர்கள் கணித்துள்ளபடி, ஜூன் 21ஆம் தேதி காலை 9. 15மணிக்குத் தொடங்கி, மதியம் 3. 04 வரை நிகழும். இதன் உச்ச நிலை மதியம் 12. 10 எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கிரகண நேரத்தில் மக்கள் முடிந்தளவு வீட்டிலே இருப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும், கோவையில் 10:12 மணிக்கும் இந்த கிரகணத்தை பார்க்கலாம். மதுரையில் 10:17:05 மணிக்கும், திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம். இந்த கிரகணத்தை சாதாரண கண்களால் காணக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.