பட்ஜெட் அறிக்கையில் 1 கோடி இந்திய குடும்பங்களுக்குப் புதிதாக எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட சில நாட்களில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல், இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய காரணங்களை கூறி, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி 04 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, இன்று (பிப்ரவரி 05) முதல் சமையலுக்குப் பயன்படுத்தும் எல்பிஜி சமையல் எரிவாயு விலையை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட புதிய விலை உயர்வு அறிவிப்பின்படி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் 719 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 745.50 ரூபாய்க்கும், மும்பையில் 719 ரூபாய்க்கும், சென்னையில் 735 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காரணத்தால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.

ஆனால் டிசம்பர் மாதம் 2 முறை அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் மூலம் எல்பிஜி சிலிண்டரின் விலை 15 நாட்களில் 100 ரூபாய் வரையில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பட்ஜெட் அறிக்கையில் 1 கோடி இந்திய குடும்பங்களுக்குப் புதிதாக எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட சில நாட்களில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது.

மத்திய அரசின் உஜ்வால் திட்டத்தால் சிலிண்டர் இணைப்புக் கொடுக்கப்பட்டாலும் அவர்களால் தொடர்ந்து சிலிண்டரை வாங்க முடியுமா என்ற கேள்வி இந்தத் தொடர் விலை உயர்வின் மூலம் எழுந்துள்ளது.

இந்திய மக்கள் இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அரசின் தரவுகள் தெளிவாகக் கூறும் நிலையிலும், சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் அடிப்படையாகப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகின்றது.

கடந்த 15 நாட்களில் ரூ.100 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை