ஆணவக்கொலை விசாரித்த துணிச்சலான இளம் பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்மமான முறையில் நிறைவேறிய தற்கொலைக்கு அவர் தந்தை சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் பல மாதமாக மன்றாடினார்..

அன்றைய செல்வி ஜெயலலிதா அரசு அதை தீவிரமாக எதிர்த்து, சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்றும் கேள்விகள் எழுப்ப, அவை விவாதப் பொருள்களும் ஆகின..

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அதில் சம்பந்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை காப்பாற்ற திரு பழனிசாமி சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றினார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன சிபிஐ இந்த வழக்கை வைத்துக்கொண்டு இன்னமும் குறட்டை விட்டு தூங்குகிறது..

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 13 பேர் வழக்கிலும் சிபிஐ தான்.. ஆண்டுகள் 4 ஆகியும் இன்னமும் எல்லாருக்கும் தெரிந்த சுட்டுக்கொன்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் பாவம் சிபிஐ திணறி வருகிறது.

இதன் மூலம் மோடி அரசின் கைப்பாவையாக மாறிய ஏவல் துறை தான் சிபிஐ என்பது எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாகி வெட்ட வெளிச்சமாகியது.

சித்தி தொடர் கொடுமையால் வீட்டுக்கு கூட செல்ல இயலாத அந்தப் பாவப்பட்ட ஹிந்து மாணவி.. பூப்படையும் போது கூட வீட்டுக்கு செல்லாத அந்த ஹிந்து மாணவி,

இப்போது கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் ஆதரவில் அப்போது இருந்தவர் என்பது ஏன் மறைக்கப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் கொடூர சித்தியிடமும் இல்லை.. 10 லட்சம் பணத்தைக் சித்திகளிடம் கொடுத்த கன்னட வெறியர்களிடமும் இல்லவே இல்லை..

சித்தி கொடுமைகளுக்கே பயந்தே அவர் வீட்டுக்கு கூட செல்லாமல் ஹாஸ்டலில் தங்கிய காரணத்தை அந்தப் பகுதி ஊர் மக்களே ஒரே குரலில் 163 ஆண்டுகளாக மைக்கேல்பட்டியில் நடக்கும் பள்ளியை ஆதரித்து பேசும்போது..

அந்த இந்துத்துவா நபர் மற்றும் அவருடன் தொடர் தொடர்பில் இருந்த அந்தக் கொடூர சித்தி கைது செய்யப்படாமல் பார்த்துக்கொண்டது ஏன் என்று நீதியின் பேரில் பரிபாலனம் நடத்தும் முருகக்கடவுள் சுவாமிநாதனுக்கு மட்டுமே வெளிச்சம்..

டெல்லியில் வேவு பார்த்த வழக்கில் மோடி மீது ஏன் எப்ஐஆர் பதிவு செய்யக் கூடாது என்று வழக்கும் விரைவில் வர உள்ளது..

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

பார்க்கலாம் காலம் மாறும் அப்போது கோலமும் மாறும்.. அந்த நல்ல நாளில் பல்வேறு ஊழலை #pegasusscam #pmcares #scam #rafalescam #petrolscam நடத்திய திருவாளர் மோடி கைது கூட 2024 ஆண்டில் சட்டப்படி அரங்கேறி கை கூடும்..

அநியாயம் தலைவிரித்து ஆடும் போது அங்கு ஒரு நியாயவான் பிறப்பான்.. ஒரு நியாய காட்சி சாட்சியாகவும் அருக கூடும். இதுவே காலம் காலமாக நமக்கு சொல்லும் உலகநீதி..

சகோதரி லாவண்யா உடல் வருந்தி மனம் நொந்து அனுபவித்த சித்திக் கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.. இந்த விஷயத்தில் பொய்மைகளை அடுக்கி பேயாட்டம் போட்ட பாஜகவை துளிக்கூட ஆதரிக்காத அதிமுகவை மனதார பாராட்டலாம் தவறில்லை..

கொடூர சித்தி வாயை 10 லட்சம் பணத்தை வைத்து லஞ்சமாக கொடுத்து அடைத்த அண்ணாமலை இன்று சிபிஐ விசாரணை வந்துவிட்டதால் சட்டத்தில் இருந்து ஒருவேளை தப்பிவிடலாம்..

ஆனால் ஹிந்து கொடூரச் சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஹிந்து மாணவி லாவண்யா தரும் சாபத்தால், பாஜக மற்றும் அதன் தலைவர்கள் முக்கியமாக அண்ணாமலை மற்றும் அவர் குடும்பம் சீரழிய கடவது என்று அந்த ஊர் மக்கள் பேசும் பேச்சும் இப்போது எழத் தொடங்கியுள்ளது..

அதிகாரத் திமிர் எடுத்து கொழுப்பில் பேசும்போது சித்தி கொடுமையால் துன்புற்றுவர்களை கண்ணுற்றவர்கள் இறைவனுடன் தானே தங்கள் இயலாமையை பேசுவார்கள்..

காலம் கனியும் அல்லவைகள் நீங்கும்.. ஆனானப்பட்ட ஹிட்லரே இருந்த இடம் தெரியாமல் போன பின்னர், ஹிந்து மக்களின் கல்விக்காக கால் காசு செலவழிக்காத ஆர்எஸ்எஸ்..

மூன்று முறை தீவிரவாத காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ்.. இந்துத்துவா கொள்கைகளை மட்டும் பரப்ப ஹிட்லர் லோகோவை பயன்படுத்தி தொடர்வது மட்டுமா நீடிக்கும்..
நம்பிக்கையுடன்…

https://www.facebook.com/savenra/posts/7876300939062427