மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் கடந்த சில மாதங்களாக தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது. தற்போது இப்படத்தின் கன்னட ரீமேக் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

கடந்த ஆண்டு வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படம் உலக அளவில் பல விருதுகளையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் இப்படத்தின்ல் கதாநாயகனாக நடித்திருந்தார். பட்டியலின இளைஞர் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், சாதி வெறியின் நிஜமான முகத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது இப்படம். இந்த திரைப்படத்தை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்று கூறமுடியும். மேலும் தமிழக மக்கள் இப்படத்தை வெகுவாக வரவேற்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கலவாணி மாப்பிள்ளை படத்தின் இயக்குனர் காந்தி மணிவாசகம் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இதில் மைத்ரேயா கதாநாயகனாக நடிக்க உள்ளர். இவர் ஏவிஎம் சரவணன் அவர்களின் பேத்தி அபர்ணா குகனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்நாடகாவில் உள்ள மாண்டயா என்ற இடத்தில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள மாண்டயா என்ற இடத்தில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது.