தமிழகத்தில் பத்தாம் வகுப்பை பொதுத்தேர்வை காலம் தாழ்த்தி அரசு ரத்து செய்திருப்பதை ஏற்கமுடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊடரங்கு தளர்த்தப்பட்டதில் இருந்து கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. தினமும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து செல்வதோடு, பலி எண்ணிக்கை இரட்டை இலக்கு எண்ணில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு போது தேர்வை நடத்தக்கூடாதென ஆசிரியர்கள், அரசியல் கட்சிகள், பெற்றோர் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், பொது தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு உறுதியாக தெரிவித்தது.

முன்னதாக ஜூன் 1ம் தேதி தேர்வு தொடங்கும் என அறிவித்த அரசு, பின்னர் ஜூன்15ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இரண்டு முறை தேர்வு தேதியை தள்ளிவைத்த அரசின் நடவடிக்கை மாணவர்களிடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை ஜூன்15ம் தேதி நடத்தக் கூடாதென உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வினை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: இ-பாஸ் வழங்க கெடுபிடி காட்டும் அரசு.. இவர்களுக்கு மட்டும் தாராளம்..

ஆனால். அரசின் இந்த முடிவை விமர்சித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட பதிவில், “அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அண்டை மாநிலமான தெலங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள், ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு, காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும்” என விமர்சித்துள்ளார்.