காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் கடந்த 30 ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கமல்நாத் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தன்னிச்சையானது என்று கூறிய கமல்நாத், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? நட்சத்திர பேச்சாளர் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டுமா? அல்லது கட்சி முடிவு செய்ய வேண்டுமா? என்று தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்,

பிரிவு 77ன் கீழ் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிக்க உங்களுக்கு அதிகாரம் எங்கிருந்து கிடைக்கிறது? உங்களுக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைய உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அரசின் 6 விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு குத்தகை: அதானி ஒப்பந்தம்