தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
கடந்த நவம்பர் 30–ந்தேதி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி சி.பி.ஐ.க்கு சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிலை கடத்தல் தொடர்பான வழக்குங்களை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.
 
பல அதிமுக மற்றும் ஆர் எஸ் எஸ் அதரவு ஹிந்துவா முக்கிய புள்ளிகள் சிலை கடத்தலில் சம்பந்தப்பட்டு இருப்பதால் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது என்பது அனைவரும் அறிந்த்தே.
 
 
இதனால் கடுப்பான ஆளும் தரப்பு எப்படியாவது சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் நடவடிக்கையை தடுக்கும் முயற்சியாக சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் செய்ய செய்யும் படி செய்து.,
 
அந்த அவர்கள் புகாரில் சிலை கடத்தல் வழக்கில் உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய பொன் மாணிக்கவேல் வற்புறுத்துகிறார் என்று தெரிவித்த நிலையில் .,
 
சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது சக அதிகாரிகளின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
எற்கனவே தமிழக அரசு தன்னை சுதந்திரமாக செயலாற்ற விட மறுப்பதாக உயர் நீதிமன்றாத்திலே ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறிய நிலையில்.,  இப்போது அவரை அவரின் சக அதிகார்களையே வைத்து முடக்க நினைப்பது காவல் துறை வட்டாரத்திலே பரபரப்பை எற்படுத்தியுள்ளது என்கிறது நம்ப தகுந்த காவல் துறை சோர்ஸ்கள்