ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்தில் அவரது மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நிவேதா தாமஸ் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது வேடம் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் 167-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு மாதம் தொடர்ச்சியாக மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.