அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த ‘கோமாளி’ படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து, ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்திற்காக 2015 ஆம் ஆண்டு உருவான சென்னை வெள்ளம் தொடர்பான காட்சிகளை மீள் உருவாக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இயக்குனர் பிரதீப், இப்படத்தில் சென்னை வெள்ளத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளோம். அதற்காக இன்டோர் செட் போட்டோம். காரணம் லைட்டிங் சேஞ்சாகிட்டு இருக்கும் என்பதால் தான். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் செட் போட்டோம். அதுக்காக 20 நாட்களுக்கு முன்பே தொட்டி கட்டினோம்.

மடிப்பாக்கம் ஏரியாவ தான் ரீகிரியேட் பண்ணோம். அப்போது மே மாதம் என்பதால் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் கடல் நீரை பயன்படுத்தினோம். நான்கு நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக ஷூட் செய்தோம் என்றார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.