அதிமுகவினருக்கு ஆண்மை இல்லை என்று பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கூறாத நிலையில், பதறியடித்து கதறி அழுது அண்ணாமலை ஏன் மன்னிப்பு எங்களிடம் கேட்க வேண்டும் என அதிமுகவினர் குழப்பமடைந்து கேட்கிறார்களே..

நயினார் நாகேந்திரன் உபயோகப்படுத்திய வார்த்தை ஆர்எஸ்எஸ் வாலா #impotent புகழ் கொண்டவரும் மற்றும் துக்ளக் சொத்துக்களை செல்வி ஜெயலலிதாவின் சாராய ஆலைகளில் பினாமியாக இருந்த சோ மற்றும் அவர் குடும்பத்திடமிருந்து மர்மமான முறையில் கைப்பற்றிய குருமூர்த்தியிடம் இரவல் பெற்று சொல்லப்பட்டது தான்..

நயினார் நாகேந்திரன் சார்பாக கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டவர் ஏன் குருமூர்த்தி பேசிய அதே வார்த்தைகளுக்கு குருமூர்த்தி சார்பாக மன்னிப்பு கேட்க மறுக்கிறார் என்ற கேள்விகளும் அதிமுகவினர் மத்தியில் இப்போது எழுந்து இருப்பதால் இந்த ஐயப்பாடு வந்திருக்கலாம்..

ஒருவேளை அதிமுகவும் கைவிட்டுவிட்டால் டெபாசிட் வாங்க வேண்டும் என்ற பயம் பாஜகவுக்கு இருக்குமல்லவா.. அப்போது பதட்டம் பயம் கதறல் கண்ணீர் எல்லாம் தானாகவே அருவி போல் கொட்டும் அல்லவா..

ஒரு பக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக வேர்க்கடலை வறுப்பவர்கள் சங்கத்தின் திடீர் ஆதரவு.. மறுபுறம் நயினார் நாகேந்திரன் குரலுக்கு மட்டும்தானா கண்ணீர் மறுப்பு வருத்தம் என்ற அதிமுகவினரின் பகிர் கேள்விகள்..

உப்பு விற்றால் மழை.. மாவு விற்றால் காற்று.. பாஜகவை பார்த்தால் சில சமயங்களில் பாவமாகத்தான் இருக்கிறது.. ஆனாலும் இங்கு ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆகவேண்டும்..

போலியாக பாஜகவினர் ஆர்எஸ்எஸ் துணையுடன் சேர்ந்துகொண்டு கிளப்பிய மதமாற்ற பிரச்சினை வீடியோக்களை கருத்தில் கொள்ளாமல்.. நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த தஞ்சாவூர் கிறிஸ்டின் மிஷனரி பள்ளிக்கு ஆதரவளித்து, போலியாக ஆர்எஸ்எஸ் கிளப்பிய மதமாற்ற விஷயத்தில் பாஜகவை அம்போவென நடுத்தெருவில் விட்டதால் அதிமுகவை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும் இந்த விஷயத்தில்..

மற்றபடி நோட்டாவை மிஞ்ச் வேண்டும், டெபாசிட் வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வருத்தமுடன் பதறி பாஜக தமிழக தலைவர் சிந்தும் கண்ணீரை ஏற்றுக்கொள்வதும்.. ஏற்றுக் கொள்ளாததும் அதிமுகவினரின் உள்கட்சி விவகாரம் என்பதனால் தலையிடுவதில் தார்மீக உரிமை நமக்கு இல்லை..

https://www.facebook.com/savenra/posts/7837432169615971