கேளிக்கை சினிமா பெண்கள்

என் தற்கொலைக்கு சீமானே காரணம்… நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்

நான்கு மாதங்களாக சீமானால் சித்ரவதை அனுபவித்து வருவதாக தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி, நேற்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் காரணம் எனக் குற்றம்சாட்டி, இது எனது கடைசி வீடியோ என்று குறிப்பிட்டு விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோ பதிவில், “நான் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளேன். இது தான் நான் பேசும் கடைசி வீடியோவாக இருக்கும்.

கடந்த நான்கு மாதங்களாகச் சீமான் மற்றும் அவரது கட்சியினரால் நான், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன். எனது தாய் மற்றும் சகோதரிக்காக உயிர் வாழவேண்டும் என நினைத்தேன். ஆனால் ஒரு பெண்ணாக என்னால் தாங்க முடியவில்லை.

என் ரசிகர்களுக்கு ஓர் வேண்டுகோள். சீமானை சும்மா விடாதீர்கள். அவருக்கு முன் ஜாமீன் கூட கொடுக்கக்கூடாது. எனது மரணம் எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும். யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை” என்று தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ‘வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் ஆண்மான்களை ஆதரிப்பதில்லை’- கவிஞர் வைரமுத்து

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.