சென்னையை தாக்க இருந்த பானி புயல் ஒடிசா நோக்கி திரும்பி கோர தாண்டவம் ஆடிய இதுவரை 28 உயிர்களை பறித்ததை நாம் அறிந்ததே ..
 
இந்த நிலையில் தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தமிழகத்தில் கடந்த வெள்ளியன்று துவங்கியது.
 
கத்திரி வெயில் காலத்தின் முதல் நாளான சனிக்கிழமையன்று வெயில் அவ்வளவாக இல்லாவிட்டாலும், நல்ல அனல் காற்று வீசியது.
 
இரண்டாவது நாளான ஞாயிறன்று அக்கினி நட்சத்திர வெயில் காலையில் இருந்தே மிகவும் கடுமையாக இருந்தது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியவிவரம் வருமாறு
 
தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
 
சென்னையில் 103 டிகிரி வரை வெப்பநிலை காணப்படும்.
 
சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தனர்