சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தப்படுவதாக கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் செவ்வாய்கிழமை அறிவித்தார். கேன் தண்ணீர் உற்பத்தி சிறு தொழில் சார்ந்தது எனவும், அதில் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபவடுவதில்லை, நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் சுத்திகரித்து விநியோகித்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.