உரி சம்பவத்தின் பின்னர் ஏன் விமானத்தாக்குதகள் நடத்தப்படவில்லை.. 1972ற்கு பிறகு இந்தமுறை கட்டுப்பாட்டுக்கோட்டை கடக்கவேண்டிய காரணம் என்ன..
 
இப்போது மோடி அரசு ஊழலில் மாட்டி கொண்டு முழிமுழிப்பது போர் விமானங்களால் தானே. அதான் இந்த முறை தரைப்படையை பயன் படுத்தாது விமானப்படை தாக்குதலா..
 
பன்னாட்டு ஊடகங்கள் சொல்வது – இந்திய போர் விமானங்கள் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட் என்னும் இடத்தில் தாக்குதல் நடத்தின.
 
இந்திய வெளியுறவுத்துறை செயலர் அளித்த பேட்டி – கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் என்னும் இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
கைபர் பக்துன்க்வா மாகாணம் பாக்கிஸ்தானின் ரைட் ராயல் நிலப்பரப்பு. 1947 முதல் பாகிஸ்தானோடு இருக்கும், சுதந்திரத்தின் போது முறையாக பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதி.
 
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது சர்ச்சைக்குள்ளான இடம். 1947-2019 காலகட்டத்தில் இந்திய படைகள் பலமுறை நடவடிக்கைகள் எடுத்த பகுதி.
 
மிகப்பெரிய நடவடிக்கை 2008ல் எடுக்கப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசு இதையெல்லாம் விளம்பரப்படுத்தவில்லை.
 
நிற்க.
 
இந்திய அரசு சொல்வது போல கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தாக்குதல் நடத்தப் பட்டிருந்தால் பன்னாட்டு வெளியில் இது மிகப்பெரிய செய்தி.
 
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்திருந்தால் இது மற்றொரு செய்தி. இதனால் அயல் நாடுகள் இத்னை அலட்டிக்கொள்ள எதுவும் இல்லை.
 
பன்னாட்டு ஊடகங்களின் அமைதியான ரியாக்ஷனை பார்த்தால் இந்திய ஊடகங்கள் பொய் சொல்லியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
 
மற்ற நாடுகளை விட  சரி பாகிஸ்தானின் ரியாக்ஷன் இங்கு ரொம்ப முக்கியமாக பார்க்க வேண்டும்
 
அந்நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் தன் கக்கத்தில் வைத்திருக்கும் ராணுவம் – “விட்றா விட்றா…. தேர்தல்னு வந்தா இந்த மாதிரி நியூஸ் வர்றதெல்லாம் சாதாரணம் தான்.” என்று பெரிது படுத்தாமல் தங்கள் மாமூல் வாழ்க்கையில் கவனம் செலுத்துகின்றனர்.
 
ஒவ்வொரு மாகாணத்திலும் 4 பாலாகோட் இருக்கிறதாம். எந்த பாலாகோட் என்பதில் தான் முக்கிய விடயமே அடங்கி உள்ளது
 
இந்திய விமானப்படையின் ஸ்டார்கள் – மிக் ரக விமானங்கள் ஆயிற்றே. ஏன் இம்முறை மிராஜ்..

மேலும் வாசிக்க : அரசு உத்தரவாதம், வங்கி உத்தரவாதம் மற்றும் செயல்பாடு உத்தரவாதம் எதுவுமே பெறாமல் மோடி வாங்கிய விமான ஊழல்

மிராஜ் போர் விமானங்கள் பிரான்சில் தயாரிக்கப்பட்டவை. மோடி அரசு  கமிஷன் அடித்து ஊழல் குற்றசாட்டும்  ராஃபேல் விமானங்களும் பிரான்ஸ் நாட்டு விமானங்கள்.
 
கூட்டி கழிச்சி பாருங்க. கணக்கு ரபேல் ரபேல்ன்னு கத்தும் .. 500 கோடி கூட கட்ட முடியாக அனில் அம்பானி கையில் இந்திய ராணுவத்தின் ஒப்பந்த உண்மை ஊர் வாயை பொத்தும்