சீனாவில் உள்ள ஷாங்காய் ரயில் நிலையம் உலகில் அதிவேக 5ஜி தொழில்நுட்ப சேவையை பயன்படுத்தி பயணிகளை கவர்ந்து வருகிறது.
 
மிகப்பெரிய ரயில் நிலையமான அங்கு நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருவதால் அவர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் விதமாக நடமாடும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹவாய் (Huawei), ஷாங்காயின் ஹாங்கியோ (Hongqiao) ரயில் நிலையத்தில் உட்புற 5 ஜி நெட்வொர்க்குகளை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
 
இதன்மூலம் ஹாங்கியோ ரயில் நிலையமானது உலகிலேயே 5ஜி டி.ஐ.எஸ். (5G digital indoor system) வசதி கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.