இந்திய அரசின் எல்லை விரிவாக்கக் கொள்கைகள் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் லடாக்கில் இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்துள்ளன. இதனால் கடந்த இரு வாரங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சீனா போர் விமானங்களையும் படைகளையும் எல்லையில் குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பதிவில், “இந்துத்துவா ஆதிக்கம் கொண்ட மோடி அரசு, தனது அகங்காரம் கொண்ட கொள்கைகளாலும் நாசிஸ போக்காலும் இந்தியாவின் அண்டைய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் வங்கதேசத்துக்கும், எல்லை விவகாரத்தில் சீனா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா அச்சுறுத்தல் விடுக்கிறது.

4-ஆவது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர்க் குற்றமாக கருதப்படும் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரை சட்டவிரோதமாக இணைந்து கொண்டதன் பிறகு, ஆசாத் காஷ்மீருக்கும் உரிமை கோருகிறது.

மேலும் பாசிஸ்ட் மோடி அரசு 2ஆம் தர குடிமக்களாக கருதி சிறுபான்மையினருக்கு மட்டும் அச்சுறுத்தலாக இருந்த வந்தநிலையில் தற்போது பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க: அனுஷ்கா சர்மாவை விவகாரத்து செய்ய விராட் கோலிக்கு அட்வைஸ் செய்த பாஜக எம்எல்ஏ