இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘கிரேடு-பி’ தரத்திலான ஒப்பந்த அடிப்படையிலான 60 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Specialists in Grade ‘B’
1. Finance – 14 இடங்கள்
2. Data Analytics – 14 இடங்கள்
3. Risk Modelling – 12 இடங்கள்
4. Forensic Audit – 12 இடங்கள்
5. Professional Copy Editing – 04 இடங்கள்
6. Human Resourse Management – 04 இடங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2018

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2018 தேதிப்படி 24 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பொதுப்பிரிவினர் அல்லாத சிறப்பு சலுகையினருக்கு வயது வரம்பில் 3 முதல் 5 வயது வரை தளர்வு இருக்கலாம்.

தகுதி: எம்.பி.ஏ. (நிதி), புள்ளியியல், பொருளாதாரவியல் முதுகலை பட்டம், இதர முதுகலை பட்டத்துடன் பணி சார்ந்த துறைகளில் டிப்ளமோ படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. முடித்து குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, டெல்லி, அகமதாபாத், போபால், புவனேஷ்வர், சண்டிகர், கௌகாத்தி, ஜெய்பூர், ஜம்மூ, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பாட்னா, பூணே.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2018

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Reserve Bank of India என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய..