தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா. மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து சிலகாலமாக சினிமா வாய்ப்பு கிடைக்காமல், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் மியாமி கடற்கரைக்கு சென்ற ஹன்சிகா அங்கு கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. ஹன்சிகா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகினது.

இதனைத் தொடர்ந்து ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என் நம்பரிலிருந்து குறிஞ்செய்தி வந்தால் அதனை புறக்கணிக்கவும். எங்கள் மென்பொருள் டீம் அதனை நிவர்த்தி செய்ய ஆவண செய்து வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ள ஹன்சிகா கூறுகையில், நான் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போது எனது மொபைல் கோளாறு ஏற்பட்டது. அதன் பிறகு எனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த புகைப்படங்கள் 4 வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதனை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்.

பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நான் ஏதோ விளம்பரத்திற்காக இப்படி செய்துவிட்டதாக சிலர் விமர்சித்தனர். மேலும், சிலர் கருத்துக்களை வெளியிட்டனர். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. அப்போது சிலர் எனக்கு ஆதரவாக இருந்தனர். இது எனக்கொரு பாடமாக அமைந்தது. மொபைல் போனை ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று குறிப்பிட்டு விளக்கமளித்துள்ளார்.