அரசியல் தமிழ்நாடு தொழில்கள்

அதிமுக அமைச்சர் தங்கமணி காற்றாலை மின்சாரத்தில் ஊழல் ஆதாரம் வெளியிடு

காற்றாலை ஊழல் விவகாரத்தில் அமைச்சர் தங்கமணி பதவி விலக தயாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆதாரங்களை திரட்டிய பிறகு தான் குற்றச்சாட்டையும் கூறுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் செய்யாத காற்றலைக்கு ரூ.9.17 கோடிக்கு போலி பில் தயாரித்தது அம்பலம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தணிக்கை அறிக்கையை முறைகேடுக்கு ஆதாரமாக ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், “உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதில் , இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது .

அந்த அறிக்கையில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் சொல்வது என்றால், “Bogus Energy allotment made without generation” என்று அந்த ஆடிட் அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க முயற்சி செய்வது வீண் முயற்ர்ச்சியே என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மின்வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுங்கள் என்று ஆடிட் அதிகாரி கூறியிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளளார்

மேலும் அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வைப் பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும்.,

அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது என்றும் .,

மேலும் அந்த மேற்பார்வைப் பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்.,

அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், 11 கோடி ரூபாய் பணம் செலுத்தக்கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்றும்.,

ஆகவே, காற்றாலை மின்சாரத்தில் “போலி ஒதுக்கீடு கணக்கு” காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது என்றும் கூறியுள்ளார்
இதனால் பதவி விலகுவரா ஊழலில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர் தங்கமணி என்று கேள்விகளும் இப்போது எழுந்து உள்ளன

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

129 Replies to “அதிமுக அமைச்சர் தங்கமணி காற்றாலை மின்சாரத்தில் ஊழல் ஆதாரம் வெளியிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *