சின்னத்திரை நடிகை நிலானி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமான இவர் தனது கணவரை விவாகரத்து செய்தவர். நிலானி நிலாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வளசரவாக்கத்தில் குடியிருந்து வரும் நிலானி தென்றல், தாமரை, பிரியமானவள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்தவர். காதலும் கடந்து போகும், தெரு நாய்கள், நெருப்புடா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்ததற்கு, படப்பிடிப்பின்போது அணிந்திருந்த போலீஸ் உடையிலேயே கண்டித்து வீடியோ வெளியிட்டிருந்தார். முதலில் போலீஸ் பெண் அதிகாரி ஒருவர் தான் போலீசுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது. பின்னர்தான் அவர் டி.வி. நடிகை என்பது தெரிய வந்தது. வடபழனி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் நிலானி ஜாமீனில் வெளியே வந்தார். தொலைக்காட்சி தொடர்களில் அவர் மீண்டும் நடித்து வருகிறார்.

நிலானி, உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் என்ற வாலிபருடன் பழகி வந்தார். இதுகுறித்து நிலானி அளித்த பேட்டியில், கடந்த 3 ஆண்டுகளாக இருவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. கணவர் கைவிட்ட நிலையில் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் தனக்கு உதவியாக இருந்ததாகவும், குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வேலைகளை அவராகவே செய்தார். நாட்கள் செல்ல செல்ல தன்னை காதலிப்பதாக கூறியதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் தான் வேறு வழியில்லாமல் அவரின் காதலை ஏற்றேன். உடனே திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தோம். அப்போது தான் லலித் குமார் மோசமானவர், அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் என்று அவரின் சகோதரிகளே என்னை எச்சரித்தனர். சகோதரிகளே அப்படி கூறியதை அடுத்து லலித் குமாரிடம் இருந்து விலக முயன்றேன். ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில் மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் காந்தி லலித்குமாரும், நானும் நண்பர்களாக பழகி வந்தோம். தற்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் தொந்தரவு செய்து வருகிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் இதுபற்றி மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆனால், நிலானியின் இந்த குற்றச்சட்டை காந்தியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மறுத்துவந்தனர். நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை கே.கே.நகர் ராஜாமன்னார் சாலை தனியார் பள்ளி முன்பு நடிகை நிலானி வந்துள்ளார். இதை அறிந்த காந்தி பெட்ரோல் கேனுடன் அங்கு வந்துள்ளார். அதற்குள் நிலானி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, பெட்ேராலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே நிலானியும்் காந்தியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நடிகை நிலானி தன் மீதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்துள்ளார்.

தற்போது, காந்தி தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரது காதலியும் நடிகையுமான நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.