கேளிக்கை சினிமா

தாதாசாகேப் பால்கே விருதுகள் 2020: அஜித், தனுஷ், ஜோதிகா தேர்வு

நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் 2020 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரையுலகின் தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

சூர்யா வெளியிட்ட ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்.. அமேசான் ப்ரைமில் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் மே.29 ரிலீஸ் ஆகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஜெ.ஜெ. பிரெட்ரிக் இயக்கியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜோதிகா மற்றும் நடிகர் பார்த்திபன் வக்கீல்களாக நடித்துள்ளனர். ட்விட்டரில் பொன்மகள் வந்தாள் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. ஊட்டியில் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் மர்மங்களை பற்றி நீந்திமன்றத்தில் நடக்கும் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

சாதனை படைத்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’- நெகிழ்ந்த இயக்குனர்கள்

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ சாதனையைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாக்யராஜ், தன் சிஷ்யர்களைப் பார்த்து தான் வெட்கப்படுவதாக கூறியுள்ளார். நடிகர் பார்த்திபன் தனது அடுத்த முயற்சியாக தான் ஒருவர் மட்டுமே நடித்து, எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே முழுப்படத்திலும் வரும்படி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே Asia book of record, மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

அந்த இருக்கையில் மட்டும் உட்கார மாட்டேன் என அடம் பிடித்த பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் சினிமாவில் ஒரு தனி திறமையான கலைஞர். அவரின் படங்களில் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அவரின் பேச்சிலும் ஆழமான விசயம் இருக்கும். டிவிட்டரில் அவரின் பதிவுகள் கொஞ்சம் இண்டிரஸ்டிங் தான். அவரின் மகளின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. தான் விரும்பியபடி நடிகர் சங்கம் சார்பாக இளையராஜாவுக்கான இசை விழாவை நடத்திவிட்டார். ஆனால் அதில் அவர் கலந்துகொள்ளாதது பலருக்கும் வருத்தமே. அண்மையில் கோவை சென்றுள்ளார். அங்கு அவருக்காக ஒரு வாகனம் ஏற்பாடு மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

தயாரிப்பாளர் சங்கம், பட வெளியீடு என அனைத்திலும் தோல்வியை சந்திக்கும் வி‌ஷால்

தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு அதிகாரிக்கு உதவியாக செயல்பட எஸ்.வி.சேகர் உட்பட 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை கோரி வி‌ஷால் சார்பாக தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என்.சேகர் என்பவரை நியமனம் செய்தது. இந்த நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

‘பார்த்திபன் கொலை செய்ய முயற்சியா’- ஹியூமர் சென்ஸ்க்கு அளவே இல்லை

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மீது அவரது உதவியாளர் ஜெயங்கொண்டான் என்பவர் புகார் அளித்துள்ளார். பார்த்திபன் வீட்டில் வேலை செய்து வந்தவர் ஜெயங்கொண்டான். திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பார்த்திபன் மீது, ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர் பார்த்திபன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன், தற்போது பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் நடிகர் விஷால். துணை தலைவர் பொறுப்பை நடிகரும், இயக்குனருமாஞான பார்த்திபன், பிரகாஷ்ராஜ் வகித்து வருகின்றனர். செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பார்த்திபன் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் தேர்வு

தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவராக இருந்த கெளதம் வாசுதேவ் மேனனுக்குப் பதிலாக, நடிகர் பார்த்திபன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதனால் இப்போதே சங்கத்தில் சச்சரவுகள் தொடங்கிவிட்டன. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத விஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனக் கூறி எதிர் அணியினர் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து எதிர் அணியினர் தயாரிப்பாளர் சங்கத்தின் திநகர் மற்றும் அண்ணாசாலை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதை மேலும் வாசிக்க …..

கேளிக்கை

ரூ.100 கோடி பேரம் – நடிகர் பார்த்திபன் பகீர்

அண்மையில் நடிகர் பார்த்திபன் கூறுகையில், அரசியல் தலைவர் ஒருவர் தன்னை அவரது கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக கூறினார் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ‘‘சினிமாயணம்’’ என்ற தலைப்பில் பேசினார். “சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா ரொம்ப கண்டிப்பானவர். மேலும் வாசிக்க …..