சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாஜக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கைது

சென்னையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரும், வட வடசென்னை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழு உறுப்பினரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறி 8 பேர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் மேலும் வாசிக்க …..

அரசியல்

புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை; ஆவடி CRPF தலைமை அதிகாரி அசத்தல்

ஆவடியில் செயல்பட்டுவரும் CRPF தலைமை அதிகாரி ஒருவர் புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை (PPE kit) வடிவமைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் குறையாமல் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில உள்ளது. இதுவரை 91,77,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,34,254 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மேலும் வாசிக்க …..

இயற்கை தமிழ்நாடு புதுச்சேரி

நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை

நிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் மற்றும் 7 மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவம்பர் 23) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த மேலும் வாசிக்க …..

இயற்கை தமிழ்நாடு

நிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை

நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், வருகின்ற 25 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணரமாக, முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கினர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதனையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆா் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் இன்று (நவம்பர் 22) காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் மேலும் வாசிக்க …..

இயற்கை காலவரிசை சுற்றுச்சூழல் தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 23 முதல் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக நவம்பர் 23 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் பெண்கள் வாழ்வியல்

சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம்- தெற்கு ரயில்வே

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தற்போது குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் கடைசி ரயில் வரையிலும் பெண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

அரசின் இ- சேவை காகித அளவிலேயே உள்ளது- சென்னை உயர்நீதிமன்றம்

மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ- சேவை காகித அளவிலேயே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி என்னும் கிராமம் யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள ஜெய்னுலாப்தீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நவம்பர் 20 நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபொது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மசினகுடிபகுதியில் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்

அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah

அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் மேலும் வாசிக்க …..