கேளிக்கை தமிழ்நாடு மருத்துவம்

We For O2- 6 மணி நேரத்தில் ரூ.20 லட்சம் நிதி திரட்டிய யூட்யூபர்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்காக யூடியூப் எனும் சமூக வலைத்தள பிரபலங்கள் ஒன்றிணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலங்கள் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம்

‘இந்திய அரசை காணவில்லை’- முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோவால் சர்ச்சை

‘இந்திய அரசை காணவில்லை’ என நாட்டின் முதன்மை பத்திரிகைகளில் ஒன்றான அவுட்லுக் இந்தியா பத்திரிகை முதல் பக்க அட்டைப்படம் வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நிலவும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் தினசரி லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேரிடர் காலத்தை கையாளும் விதம் குறித்து உலக மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் பாஜக

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்; தேசிய அளவில் டிரெண்டான #ResignModi

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று #ResignModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாகவும், மேலும் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மத்திய அரசு அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் மேலும் வாசிக்க …..