சமூகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி பெண் பலி

சேலம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நாட்டுக்கோட்டை மேம்பாலம் அருகே கடந்த ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளார். அவரின் கார் முன்னால் டிஐஜி விரைவுப் படை வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் காரின் பின்னால் அமர்ந்திருந்த 2 பெண்கள் பலத்த மேலும் வாசிக்க …..

சமூகம்

தனது சகோதரனை உயிருடன் சவப்பெட்டியில் வைத்த கொடூரம்.. முதியவர் பரிதாப மரணம்

உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் பாலசுப்ரமணியம் (வயது 74), அவரது சகோதரர் சரவணன் (வயது 70), அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு மருத்துவம்

தலைமை மருத்துவர் சுகுமார் கொரோனா தொற்றால் பலி; உரிய பாதுகாப்பின்மை காரணமா..

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், இதுவரை மருத்துவர்கள், ஊழியர்கள் என ஒருவருக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளனர் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய ஓரிரு நாட்களில் தலைமை மருத்துவர் சுகுமார் கொரோனா தொற்றால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300 மருத்துவர்கள், 350 செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தம் 350க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை மேலும் வாசிக்க …..

சமூகம் மருத்துவம்

மருத்துவ வசதி இல்லாத உத்திரபிரதேசம்; பச்சிளம் குழந்தை பலி

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து, குழந்தை இறந்த நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தையை கட்டியணைத்து தந்தை கதறி அழும் கட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணூஜில், பிரேம்சந்த் – ஆசா தேவி தம்பதியினர் அதிக காய்ச்சல் மற்றும் கழுத்து வீங்கிய நிலையில் தன் குழந்தை அனுஷ்யை, கண்ணுஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை தொட மருத்ததோடு, சிகிச்சையளிக்காமல் கண்ணுஜிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கான்பூர் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் மருத்துவம்

கொரோனா தடுப்பு கிட்ஸ் பற்றாக்குறை காரணமா..மருத்துவர் பிரதீபா மரணத்தில் சர்ச்சை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த இறுதியாண்டு மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவருகிறார். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பணியில் ஈடுபடுபவர்கள் வீட்டிற்கு செல்லாமல் விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு

தமிழக அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு நடந்த விபரீதம்

கோவை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசியை அகற்றாமல் அலச்சியமாகவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்துவரும் பிரபாகரன் மற்றும் மலர்விழி தம்பதிகளுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் அரசு மருத்துவமையில் குழந்தை பிறந்த மறுநாளில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் உடல்நலத்தில் வேறு ஏதாவது பிரச்னை இருக்கலாம் என பெற்றோர் அவ்வப்போது மருத்துவர்களை அழைத்து பார்த்துள்ளனர். மேலும் வாசிக்க …..