அமெரிக்கா உலகம் வாக்கு & தேர்தல்

ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்க கோரி டிரம்ப் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அந்த மாகாண உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் டொனால்ட் டிரம்ப் தரப்பு தங்களது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது. மேலும் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான பல்வேறு மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணரமாக, முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கினர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதனையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆா் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் இன்று (நவம்பர் 22) காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்

அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah

அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; சரிபார்ப்பு விவரங்கள் உள்ளே..

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி இன்று (நவம்பர் 16) வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் விவரங்கள் அறிந்து கொள்ள: தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு இந்த பட்டியலில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370 பேர், பெண்கள் 3,09,25,603 மேலும் வாசிக்க …..

கட்சிகள் தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்

பாஜக மேடையில் காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்த பாஜக எம்பி சிந்தியா

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச அரசியலில், முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலில், கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவாளர்களான 25 எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா வாக்கு & தேர்தல்

நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 ஆதரவு 105 எதிர்ப்பு 20 பேர் புறகணிப்பு குமாரசாமி அரசு கவிழ்ந்தது

கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டபேரவையில் தாக்கல் செய்தார்.   தீர்மானத்தின் மீது ஒரு மணி நேரம் அவர்பேசிக்கொண்டிருந்தபோது, எம்எல்ஏகளுக்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறக்கும் அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாயிண்ட் ஆப் ஆர்டரை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்ததால், அன்று நாள் முழுவதும் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

64 முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அறிக்கை

கடந்த 30 ஆண்டுகளில் தற்போது நடந்த லோக்சபா தேர்தல் தான் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணைந்து விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019 லோக்சபா தேர்தல் தான் 30 ஆண்டுகளில் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். லோக்சபா தேர்தல் தொடர்பாக 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் நடந்த ஆபத்தான முரண்பாடுகள் குறித்து 20 பக்க விரிவான மேலும் வாசிக்க …..

அரசியல் வாக்கு & தேர்தல்

குலுக்கல் முறையில் 2% VVPAT எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பால் ஆளும் கட்சி அதிர்ச்சி

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: பல இடங்களில் தேர்தல் குளறுபடிகளை அடுத்து வாக்கு எண்ணிக்கையை சரிவர நடத்த அறிவுறுத்தல் சென்னை:   வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு, இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தேர்தல் குளறுபடிகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.   மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் சமூகம் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

தமிழ்நாட்டில் 1.2 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அல்வா கொடுத்த தேர்தல் கமிசன்

தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்படவில்லை ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் அளித்தனர்.   சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்படட விவரம் பின்வருமாறு :   தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வாசிக்க …..