பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக கண்டு களித்தார்.
ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே வீரர்களின் அபார பந்துவீச்சால் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்து வருகின்றார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் மிக மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணியை முடித்து, வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்த ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிப்பது குறித்து பேசும் போது போர் வரட்டும் பார்க்கலாம் என கூறினார். தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்தார். இதனால் தேர்தல் பிரச்னைகள், சுற்றுப்பயணம் என்ற பிரச்னை இல்லை என்று பலர் விமர்சித்துள்ளனர்.