தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள்: அலுவலக உதவியாளர் – 12
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2019 @ 5.45pm
விண்ணப்பிக்கும் முறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் – ‘இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 15’ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.