மத்திய அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி மற்றும் காலியிடங்கள்: வனத்துறை பணியாளர் – 90
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் போன்ற ஏதேனும் ஒரு துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல்நிலைத் தேர்வு மையம் : சென்னை, மதுரை, கோவை, வேலூர் மற்றும் முதன்மைத் தேர்வு -சென்னை.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019 @ 6pm
விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.