மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பேசிய பேச்சு வைரலாகியிருக்கும் நிலையில், அவருடைய கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
 
சுமார் 2.30 நிமிட நேரம் ஓடும் இந்த விடியோவில், பொதுமக்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பேசுகிறார். அந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ உட்பட சில தலைவர்கள் இருக்கிறார்கள்.
 
ஆனந்திபென் பட்டேலிடம் இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் அளித்த பதிலில் ” பிரதமர் மோடியை கவனித்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்குக் அவரால் கிடைக்கும் ” என்று அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
லஞ்சம் ஊக்குவிக்கும் இது போன்ற கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான விமரிசனத்தை முன் வைத்துள்ளனர்.
 
இன்னமும் ஆனந்தி பென் பட்டேல் பாஜகவின் ஏஜெண்ட் போலத்தான் வேலை செய்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
 
எனவே, அவர் மரியாதை நிறைந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தீவிர அரசியலுக்குச் செல்லலாம் என்று கூறியுள்ளனர்.