வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்த வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
 
காங்கிரஸ் தலைமலையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் தெலுங்கு தேசம் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர்.
 
மனு அளித்த குழுவில் கார்கே, அகமதுபடேல், ஆனந்த்சர்மா, சந்திரபாபுநாயுடு இருந்தனர். திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, இந்திய கம்யூ. சார்பில் டி.ராஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
வாக்குப்பதிவின் போது ஒப்புகைச் சீட்டு வழங்குவதை கடைபிடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தபின் குலாம்நபி ஆசாத் பேட்டி அளித்தார்.
 
அனைத்து வாக்குச் சாவடிக்கைளிலும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் 50 % ஒப்புகைச் சீட்டு கருவியில் பதிவான ஓட்டுகளை எண்ணி உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம் என டெல்லியில் செய்தியாளர்களுடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட்மூத்த தலைவர் டி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.