பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி முதல் காலாண்டில் ரூ.4,876 கோடி இழப்பைக் கண்டது.இதுகுறித்து அந்த வங்கி செபி-க்கு தெரிவித்த விவரம் வருமாறு :
பாரத ஸ்டேட் வங்கிக்கு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,876 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வாராக் கடன் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம். கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வங்கி ரூ.2,006 கோடி லாபம் ஈட்டியிருந்தது.இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், முதல் காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.62,911.08 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.65,492.67 கோடியானது.
ஜூன் இறுதி நிலவரப்படி, வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 9.97 சதவீதத்திலிருந்து அதிகரித்து 10.69 சதவீதமாகியுள்ளது. அதேநேரம், நிகர வாராக் கடன் விகிதம் 5.97 சதவீதத்திலிருந்து குறைந்து 5.29 சதவீதமாக இருந்தது.
வாராக் கடன் அதிகரிப்பை அடுத்து அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.8,929.48 கோடியிலிருந்து இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்து ரூ.19,228 கோடியானது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
Trackbacks/Pingbacks