உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,586,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 812,539 பேர்பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,874,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கொரோனா பதிப்பில் முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் 3,605,783 பேர் பாதிக்கப்பட்டு 2வது கொரோனா பாதிப்பு நாடாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 24) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,408 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,06,349 ஆக உயர்ந்தது.
கடந்த17 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 836 பேர் இறந்துள்ளதால், நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 57,542 ஆக உயர்ந்தது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,468 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 23,38,036ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,10,771 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்தியாவில் கொரோனாவால் நாள்தோறும் 60 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு என்பது நீடிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் கொரோனா பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா விரைவில் 2வது இடத்தை எட்டும் என மருத்துவ வல்லுநர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க: நீட், ஜேஇஇ தேர்வு நடத்துவதில் மாணவர்களின் மனதின் குரலை கேளுங்கள்- ராகுல் காந்தி