வீட்டில் இருந்து பணியாற்ற ஜூலை 2021 வரை அனுமதி அளித்து, ஊக்கத்தொகையாக ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் (ரூ.74,950) நிதியும் அறிவித்து உள்ளது பேஸ்புக் நிறுவனம்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஜூலையில் கூகுள் நிறுவனம், அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லாத பணியாளர்கள் வருகிற 2021ம் ஆண்டு ஜூன் வரை வீட்டில் இருந்தபடியே பணியாற்றி கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.
இதேபோன்று ட்விட்டர் நிறுவனம், காலவரையின்றி சில பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2021 ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறோம்.
இதுதவிர்த்து, வீட்டில் அலுவலகம் அமைக்க தேவையான செலவுகளுக்காக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் (ரூ.74,950) நிதியும் கூடுதலாக நாங்கள் வழங்க இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.
மேலும் வாசிக்க: ஆகஸ்ட் 12ல் ஆரம்பமாகும் ஆன்லைன் வகுப்புகள்… அண்ணா பல்கலைக்கழகம்