நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் உள்ளது, தீவிர விசாரணை வேண்டும் என்று சுஷாந்த் சிங் சகோதரியின் கணவரான ஓ.பி சிங் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 8-ம் தேதி சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன் தனது குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், தனது வீட்டில் தூக்குப் போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறந்த முன்னணி நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் சகோதரி கணவர் ஓ.பி சிங் கூறும்போது, “சுஷாந்த் சிங் பாசிட்டிவானவர். அவர் தற்கொலை செய்துகொள்கிறவர் அல்ல. கடவுளை நம்புகிறவர். சுஷாந்த் சிங் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது, தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று கோரிக்கைவிடுத்துள்ளார். ஓ.பி சிங் ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தில், கூடுதல் டி.ஜி.பியாக உள்ளார். ஓ.பி சிங் கூறியது சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க: பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை… மன அழுத்தம் காரணமா..
சுஷாந்த் சிங் பற்றிய சில தகவல்கள்;
21 ஜனவரி 1986ஆம் ஆண்டு பாட்னாவில் பிறந்த சுஷாந்த், டெல்லி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.
எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் தனது பாணியை சுஷாந்த் சிறப்பாக கிரகித்து நடித்திருப்பதாக தோனியாலே பேட்டியில் பாராட்டி பெருமைப்படுத்தபட்டவர்.
2013இல் குஜராத் கலவரத்தை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ‘காய் போச்சே’ என்ற இந்தி திரைப்படத்தில் இஷாந்த் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தவர்.
சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக, ராஜ்புத் கர்ணி சேனா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியபோது, தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த் என்ற தன்னுடைய பெயரில் இருந்து ‘சிங் ராஜ்புத்’ என்ற சாதி குறீயீட்டின் பெயரை நீக்கிவிட்டு, சுஷாந்த் என்ற பெயரை மட்டும் வைத்தவர்.
சாதி பெயரை எடுத்ததால் தன்னை ட்ரோல் செய்த #RSS ஹிந்தூவா கும்பல்களுக்கு பதிலளித்த சுஷாந்த், “முட்டாள்களே, நீங்கள் வீரத்தைக் காட்டினால், நான் உங்களை விட 10 மடங்கு ராஜ்புத்திரன் என்பதை காட்டும் வீரம் எனக்கு இருக்கிறது. நான் கோழைத்தனத்திற்கு எதிரானவன்” என்று பகிரங்கமாக பதிலளித்தவர்.
சிக்கலான மீடியா வெளிச்சத்துக்கு பல படிம நிலைகளை கடந்து எதிர் நீச்சல் அடித்தே கடந்து வந்தவர்.. எனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் டிவி தொடர்களில் நடிக்க போய்விடுவேன். அங்கும் வாய்ப்பில்லை என்றால் நாடக மேடைக்கு சென்றுவிடுவேன். 250 ரூபாய்க்கு நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன்.எனவே, நான் தோல்வியைக் கண்டு பயப்படவில்லை என நம்பிக்கையுடன் பேசியவர்.
தீடிர் என தனது 34 வயதில் எந்த ஒரு தற்கொலை குறிப்பும் கண்டுபிடிக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார் என செய்தித் தகவல்கள் சொல்வதை எப்படி ஏற்பது என புரியவில்லை.
மேலும் அவரின் சகோதரியின் கணவர் IPS தேர்வில் மூலம் ADGP ரேங்கில் ஹரியானா மாநிலத்தில் உள்ளவர், சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் என கூறி உள்ளதையும் கணக்கில் எடுத்து கொண்டால் இந்த மரணம், தற்கொலை தானா என கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.