நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாடகி சித்ரா, தலைசிறந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, வில்லுப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவித்திருப்பதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பத்ம விபூஷன் விருதுகள்:
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர் பெல்லே மோனப்பா.
அமெரிக்காவைச் சேர்ந்த நரிந்தர் சிங் கபானி
ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே.
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன்.
டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுத்தீன் கான்.
பி.பி.லால் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.


பத்மஸ்ரீ விருதுகள்:
பட்டிமன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா
தமிழகத்தை சேர்ந்த வேளாண் துறையில் புகழ்பெற்ற பாப்பம்மாள்
தமிழகத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்
கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்ரமணியன்
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ
தமிழகத்தைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை அனிதா.
ஜோஹொ நிறுவன தலைமை செயலதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 103 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

பத்ம பூஷன் விருதுகள்:
பிரபல பின்னணி பாடகி சித்ரா
மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
மறைந்த மத்தியமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய்
மதகுரு கல்பே சாதிக்.
கேசுபாய் பட்டேல் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்; காவல்துறை அறிக்கை தாக்கல்