தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
சட்ட துறை அமைச்சர் சண்முகத்தால் கடும்  குற்றம் சாட்டப்பட்ட சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2012-ம் ஆண்டு முதல் அவர் சுகாதாரத்துறை செயலராக பதவி வகித்து வந்தார்.
 
இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திகேயன் மீது திமுக தலைவர் ஸ்டாலினும் அறப்போர் இயக்கமும் அதாரத்துடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறியது குறிப்பிடதக்கது
 
மேலும் திருச்சி, கோவை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இடமாற்ற விவரம் பின் வருமாறு :
பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பேரிடர் மேலாண் இயக்குனராக மாற்றம்
ஓமியோபதி ஆணையராக இருந்த பியூலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலராக மாற்றம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை ஆட்சியராக மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்
திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசு நியமனம்.
ஐஏஎஸ் அதிகாரி நாகரஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது
கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம்
வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆக இடமாற்றம்
தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராக பணியிட மாற்றம்
பத்திரப்பதிவு ஐ.ஜி குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம்
நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம்
கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம்
தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராக மாற்றம்
சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.