அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணையின் 7வது சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
 
ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் அக்னி-5 ஏவுகணை சோதனை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் நேற்று நடத்தப்பட்டது.
 
இதில், 5,000 கி.மீ இலக்கை அக்னி-5 துல்லியமாக தகர்த்தது. மொத்தம் 7 சோதனைகளில் 5 வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 1.5 டன் அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கக் கூடியது.
 
17 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணையின் வழித்தடங்களை கண்டறிவது, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்வது மற்றும் இயந்திரத்தின் தரம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்ட விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே இந்திய ராணுவத்தில் 700 கிமீ இலக்கை தாக்கும் அக்னி-1, 2000 கிமீ பாயும் அக்னி-2, 2,500-3,000 கிமீ இலக்கை தாக்கும் அக்னி-3, அக்னி-4 ஏவுகணைகள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.