பிரபல தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் 400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், துணைத் தலைவர், மேலாளர்கள் உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக Brian Humphries பதவியேற்றிய நாளில் இருந்து ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இக்காலக்கட்டத்தில் directors, senior directors, associate vice-presidents (AVPs), VPs மற்றும் SVP பதவிகளில் இருக்கும் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது CTS நிர்வாகம்.
இதுகுறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போதைய பொருளாதார நிலவரப்படி, நிறுவனத்தின் நிதி நிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள எங்களது நிறுவனக் கிளைகளில் 2.90 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
[su_carousel source=”media: 14132,14133″ limit=”100″ width=”660″ height=”380″ items=”1″ scroll=”2″ speed=”0”]
மேலும் வாசிக்க: ஆன்லைன் வகுப்புகள் விவகாரத்தில் குழப்பிய அமைச்சர் செங்கோட்டையன்
இந்நிலையில், நிறுவனத்தின் கொள்கைகளின்படி, தன்னார்வ பிரிப்புத் திட்டத்தின் கீழ் 400 ஊழியர்களை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தவொரு திட்டத்திலும் ஈடுபடாத பணியாளர்களை மட்டும் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பெரும்பாலான கிளைகளில் மூத்த அதிகாரிகளுக்கு 25% வரையிலான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.