மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன்இணைந்து போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது.
2004 ஆம் ஆண்டு இதே கூட்டணி அமைத்து 40 தொகுதியையும் திமுக கைபற்றியது ..இப்போதும் அதே கூட்டணி அமைந்து உள்ளது .
இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசு பேசிய விவரம் ” வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும்.தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் ” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களைத் திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு மு.சண்முகம், ப.ரங்கநாதன், வடசென்னைக்கு இ.கருணாநிதி, சி.எச்.சேகர், தென்சென்னைக்கு ஆர்.டி.சேகர், சி.வி.எம்.பி.எழிலரசன், மத்திய சென்னைக்கு எஸ்.ஆர்.ராஜா. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஸ்ரீபெரும்புதூருக்கு அசன் முகம்மது ஜின்னா, காசி முத்துமாணிக்கம், காஞ்சிபுரத்துக்கு கே.பி.பி. சாமி, ப. தாயகம் கவி, கள்ளக்குறிச்சிக்கு வி.பி.துரைசாமி, ஏ.நல்லதம்பி, ஈரோட்டுக்கு கே.ராமசந்திரன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு சபாபதிமோகன், பரணி கே.மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
40 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.